தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் தஞ்சை பெரிய கோயிலின் சிறப்பையும் தஞ்சையின் பாரம்பரி யத்தையும் கூறுவதாக அமைந்துள்ளது. இந்த பொம்மைகள் மன்னர்கள் காலத்தில் இருந்து செய்யப்பட்டு வருகிறது.
தோற்றம். வரலாறு
இந்த பொம்மைகள் மூன்று வகைகளாக அமைக்கப்படுகிறது.
- தலையாட்டும் பொம்மைகள்
- உருட்டும் பொம்மைகள்
- நடனமாடும் பொம்மைகள்
உருட்டும் பொம்மைகள் 11ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆட்சி செய்த முதலாம் ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்டதாகும். ராஜராஜனால் பெருமையுடன் தட்சிண மேரு என்று அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கான அடித்தளமாக இந்த உருட்டு பொம்மைகளே இருந்தன. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 7-ம் மகேந்திரவர்மன் கட்டிய காஞ்சி கைலாசநாதர் கோயிலை பார்த்து அதை போன்ற தொடு கோயிலை கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ராஷ்ராலுன் இஞ்சர மன்னரின் உதவியுடன் மரக்கால் வடிவத்தை பயன்படுத்தி ஒரு பொம்மையை தயாரிக்கிறார்.
அந்த பொம்மையின் வடிவம் பூமியின் சுழற்சியை தாங்குவது போல் அமைந்திருந்தது. அதை போன்று கோயிலும் அமைக்க வேண்டும் என்று அந்த பொம்மையின் அரைவட்ட வடிவிலேயே அமைக்கப்பட்டது அஸ்திவாரம் போடப்பட்டது. எந்த இயற்கை பேரிடர் வந்தாலும் அதை அனைத்தையும் தாங்க கூடியதாக அமைக்கப்பட்டது அதன் அஸ்திவாரமும் கோயிலும். இந்த பொம்பைகள் விளையாட்டாகவும், அழகுக்காக மட்டுமல்லாமல் தஞ்சை கோவிலை கட்டிய அறிவியல் முறையும் உள்ளது.
பொம்மைகள் தயாரிக்கபடும் முறை
மன்னர் காலத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட இந்த பொம்பைகள். தற்போது பேப்பர் தூள் (ம) சாக்பவுடர் கலந்து இயற்கையான முறையில் பசை தயாரித்து மூன்றையும் கலந்து வட்ட வடிவில் (சப்பாத்தி போல் ) தேய்த்து ஆண், பெண் உருவமுள்ள சிமெண்ட் அச்சில் அழுத்தி எடுத்து சிறிது நேரம் சூரிய வெயிலில் காய வைக்கின்றனர். முன், பின் இரு பாகங்களையும் இதே போன்று அச்சில் எடுக்கப்படும் பிறகு அரைவட்ட வடிவிலான அடிபாகத்தையும் (ஸ்ரீபாதம்) மேல் பாகத்தையும் ஒன்றாக இணைத்து அதன் மேல் சுக்கான் பூசப்படுகிறது. பிறகு வெயிலில் காயவைத்து எமரி பேப்பர் கொண்டு பொம்மையின் மீது தேய்க்கபடுகிறது. வலுவலுப்பாக அந்த பொம்மை மாறிய பின் வண்ணம் தீட்டப்பட்டு அடிகாண தஞ்சாவூர் பொம்பையாக மாறுகிறது.
கல்வெட்டு (ம) இலக்யை சான்றுகள்
தஞ்சை பெரிய கோவிலுக்கும் பொம்மைக்கும் இடையே தொடர்பு உள்ளதாக சான்றுகள் பொம்மையின் அடிபாகமான அரை ஸ்ரீ வாதம் எனவும், குறிப்புகளிலிப் அதவல்லான் என்னும் மரத்தால் மரக்கால் மற்றும் ராஜ சேகரியோடு ஒக்கும் ஆதவல்லான என்னும் மரத்தால் (ராஜ சேகரி) என்பது யோகநியையை குறிக்கிறது) எனவும் இருக்கிறது.
- மரக்கால் போன்ற யோகம் அதாவது கை, கால்கள் இருப்பதை மறந்து உடலை மரக்காலை போன்று ஆக்கிக்கொண்டு பூமியின் அசைவிற்கு ஏற்றாற் போல் ஆடுவதாகும். அதோடு குடினைக் கல் என்ற அடைக்கல்லும் அரைவட்ட வடிவில் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இவைகளின் உச்சமாக மூவிரலே மூணுவரை வசரமுடைய கெஸ்குபால தேவர் என்ற ஒரு பெண்ணின் திருமேனி ஒன்று கூறப்படுகிறது. உள்ளங்கையில் வைத்துக் கொள்ளும் படியான சிறிய பொம்மை அதன் அடி அதன் பாதம் (ஸ்ரீபாதம்) எனவும் கூறப்படுகிறது.
தலையாட்டி பொம்மைக்கும், கருவறையில் உள்ள அம்போத அசைவிற்கும் தொடர்பு இருப்பதாக தொல்காப்பியத்தில் செய்யுளியலில் அம்போதரங்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது ( கொச்சக உருபோகு அம்போதரங்கம்) தலையை ஆட்டகூடியதுமான இருவருவ மொம்மைகள் 19ம்
நூற்றாண்டின் முற்பாகுதியில் வாழ்ந்த மராட்டிய மன்னர் சரபோஜி காலத்தில் தொடங்கப்பட்டவையே ஆகும். இந்த பொம்மைகள் பாரம்பரிய முறையில் கைகளால் மட்டுமே தயாரிக்கபடுகிறது. தற்போது இந்த பொம்மைகள் நவராத்தி பூறைகளின் போது கொலுவுக்கு வைக்கபடுகின்ற அழகு பொம்மைகளாகவும் இருக்கிறது.
அரசின் அங்கீகாரம்
முன்பு ஐநூறுக்கும் மேற்பட்ட குடுப்பங்கள் இந்த பொம்மை செய்வதை தொழிலாளாக கொண்டிருந்தது. தற்போது நாற்பது, ஐம்பது குடும்பங்களே இந்த தொழிலை செய்து வருகிறது. இதன்காரணமாக தமிழ்நாடு அரசு கலை திருவிழா என்ற பெயரில் ஈடுபாடு உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த பாரம்பரிய கலையை கற்றுக்கொடுக்கிறது.
தமிழ்நாடு சிறப்பு வாய்ந்த இந்த பொம்பைக்கு புவிசார் குறியீடு கடந்த 2009ம்ஆண்டு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி.
- Source:
- ராஜ சேகரி http://en.wikipedia.org/wiki/R%C4%81ja_yoga
- அம்போதரங்கம் https://en.wikipedia.org/wiki/Tolk%C4%81ppiyam
- தமிழ்நாடு அரசு கலை திருவிழா https://www.youtube.com/watch?v=jWAIYlaNv8Y&ab_channel=VNews27
- https://www.tamilvu.org/slet/l0100/l0100son.jsp?subid=104
- https://thanjavur.nic.in/ta/
- https://vritti.store/collections/tanjore-doll